16 மணி நேரத்தில் 107 கண் அறுவை சிகிச்சை செய்து உ.பி. மருத்துவர் சாதனை

பிரயாக்ராஜில் உள்ள எம்எல்என் மருத்துவக் கல்லூரியின் முதல்வருமான டாக்டர் எஸ்.பி.சிங், உள் விழி லென்ஸ் பொருத்தப்பட்ட 107 அறுவை சிகிச்சைகளைச் செய்து புதிய சாதனை படைத்துள்ளார். 
16 மணி நேரத்தில் 107 கண் அறுவை சிகிச்சை செய்து உ.பி. மருத்துவர் சாதனை

கண் மருத்துவக் கழகத்தின் இயக்குநரும், பிரயாக்ராஜில் உள்ள எம்எல்என் மருத்துவக் கல்லூரியின் முதல்வருமான டாக்டர் எஸ்.பி.சிங், உள் விழி லென்ஸ் பொருத்தப்பட்ட 107 அறுவை சிகிச்சைகளைச் செய்து புதிய சாதனை படைத்துள்ளார். 

கடந்த பிப்ரவரி 25ஆம் தேதியன்று காலை 6 மணி முதல் இரவு 10.30 மணி வரை தொடர்ந்து பதினாறரை மணி நேரத்தில் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. ஒரு வாரக் கண்காணிப்புக்குப் பிறகு அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட அனைவரும் நலமாக உள்ளனர். 

இதுகுறித்து மருத்துவர் கூறுகையில், 

ஒரே நேரத்தில் பல அறுவை சிகிச்சைகளைச் செய்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் இது இனிவரும் இளைய தலைமுறையினர் அறுவை சிகிச்சை செய்வதற்கு மற்றும் பொது நலனுக்காக பணியாற்ற ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்.

மேலும், மருத்துவர் லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸுக்கு எழுதி, தேவையான சான்றுகளுடன் சாதனை குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, மருத்துவர் பிரிகேடியர், புதுதில்லியில் உள்ள ஜே.கே.எஸ் பரிஹார் ராணுவ மருத்துவமனை ஆராய்ச்சி மற்றும் பரிந்துரையின்படி, கடந்த 2011 அக்டோபரில் கிழக்கு லடாக்கில் 34 கண் அறுவை சிகிச்சை செய்து லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

கடந்த  2001, மார்ச் மாதத்தில் சிங் என்பவர்  11 மணி நேரத்தில் 81 அறுவை சிகிச்சைகளைச் செய்து லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் சாதனையைப் பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com