/

ஜம்மு-காஷ்மீரில் சாலை விபத்து: 5 பேர் பலி, ஒருவர் காயம்

ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் கார் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியாகினர் மற்றும் ஒருவர் காயமடைந்தனர்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:35 am

DIN

ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் கார் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியாகினர் மற்றும் ஒருவர் காயமடைந்தனர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸிலிருந்து காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்திற்குச் சென்று கொண்டிருந்த குடும்பம், மன்சார் அருகே கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. கார் சுமார் 200 அடி பள்ளத்தில் விழுந்தது. 

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், ஓட்டுநர் காயமடைந்தார்.

மேலும், இறந்தவர்கள் குல்சார் அகமது பட், அவரது மனைவி ஜாரா பேகம் மற்றும் அவர்களது மகன் முகமது இக்பால் மற்றும் மகள் மஸ்ரத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர், மேலும் ஒருவர் அடையாளம் காண முடியவில்லை.

கார் ஓட்டுநர் சாகீப் பலத்த காயமடைந்துள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து அப்பகுதியில் மேலும் விசாரணை நடைபெற்று வருகின்றது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.