பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

183 இந்தியர்களுடன் மும்பை வந்தடைந்தது ஏர் இந்தியா விமானம்

உக்ரைனில் சிக்கித் தவித்த 183 இந்தியர்களுடன் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மும்பை வந்தடைந்தது. 

News image
கோப்புப்படம்
Updated On :5 மார்ச் 2022, 8:05 am

DIN

உக்ரைனில் சிக்கித் தவித்த 183 இந்தியர்களுடன் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மும்பை வந்தடைந்தது. 

ஏர் இந்தியா விமானத்தில் 182 பயணிகள் காலை 11 மணியளவில் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கினர் என்று விமானச் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். 

டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணைந்து கடந்த பிப்ரவரி 26 முதல் ருமேனியாவில் உள்ள புகாரெஸ்ட் மற்றும் புடாபெஸ்டிலிருந்து மும்பைக்கு ஆறு விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. உக்ரைனிலிருந்து இதுவரை 1,134 இந்தியர்களை ஏற்றி வந்துள்ளனர். 

கடந்த பிப்ரவரி 24 முதல் உக்ரைன் வான் பகுதியில் பயணிகள் விமானப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டதால், உக்ரைனின் மேற்கு அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி மற்றும் போலந்து ஆகிய நாடுகளிலிருந்து சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் வெளியேறி வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.