புது தில்லி: உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் உன்னவ் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்ட உன்னாவ் பெண்ணின் தாய் ஆஷா சிங் மிகக் குறைவான வாக்குகளே பெற்றுள்ளார்.
உன்னாவ் தொகுதியல் இதுவரை நடந்து முடிந்த 10 சுற்று வாக்கு எண்ணிக்கையின் நிறைவில் 438 வாக்குகள் மட்டுமே ஆஷா சிங்குக்கு கிடைத்துள்ளது. பாஜக வேட்பாளர் பங்கச் குப்தாவுக்கு 42,021 வாக்குகளும், சமாஜ்வாதி வேட்பாளர்அபினவ் குமாருக்கு 30,612 வாக்குகளும் கிடைத்துள்ளன.
உன்னாப் பகுதியைச் சேர்ந்த 17 வயது பெண் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான வழக்கில் பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், உன்னாவ் பெண்ணின் தாய் அந்தத் தொகுதியில் போட்டியிட்ட நிலையில், அவருக்கு நோட்டாவை விடவும் குறைவான வாக்குகளே கிடைத்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










