FOLLOW US

ON GOOGLE DISCOVER

சிஜேபி போராட்டம்! ஜந்தர் மந்தர், நாடாளுமன்றம் பகுதிகளில் இணைய சேவை முடக்கம்!சிஜேபி போராட்டம்! இளைஞர்கள், மாணவர்கள் மீது போலீஸ் தடியடி! சிஜேபி போராட்டம்! துணை ராணுவம் கட்டுப்பாட்டில் தில்லி! மெட்ரோ நிலையங்கள் மூடல்! திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடக்கம்! ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பது தண்டனைக்குரிய குற்றம்: மசோதா இன்று தாக்கல்!மாநிலங்களவை எம்.பி.க்களின் 2 ஆண்டு செலவினம் ரூ.262 கோடி: ஆா்டிஐயில் தகவல்!நாடாளுமன்றத்தில் மேக்கேதாட்டு விவகாரத்தை எழுப்ப திமுக திட்டம்அம்மா உணவகங்களில் அடிப்படை வசதிகள் கூடுதலாக்கப்படுமா?பிஃபா 2026: ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி ஸ்பெயின் 2-வது முறை சாம்பியன்!
/

இதயத்துக்கு நெருக்கமான கதாபாத்திரம்... தேசிய விருது பற்றி ஜோதிகா பெருமிதம்!

நடிகை ஜோதிகா தான் நடித்த பாலிவுட் திரைப்படம் தேசிய விருது வென்றது குறித்து கூறியிருப்பதாவது...

News image

தேசிய விருது வென்ற படத்தில் ஜோதிகா, படத்தின் போஸ்டர். - படங்கள்: இன்ஸ்டா / ஜோதிகா.

Updated On :19 ஜூலை 2026, 8:04 pm IST

நடிகை ஜோதிகா தான் நடித்த பாலிவுட் திரைப்படம் ஸ்ரீகாந்த் தேசிய விருது வென்றது குறித்து, “இது என் இதயத்துக்கு நெருக்கமான கதாபாத்திரம். 25 ஆண்டுகளுக்குப் பிறகு நான் பாலிவுட்டில் கையெழுதிட்ட படமும் இதுதான்” எனக் கூறியுள்ளார்.

துஷார் ஹிரானந்தனி இயக்கிய ஸ்ரீகாந்த் என்ற பாலிவுட் திரைப்படத்துக்கு ’சிறந்த ஹிந்தி திரைப்படம்’ என்ற தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இந்தப் படம் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

ஆந்திராவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லாவின் பயோப்பிக்கில் ராஜ்குமார் ராவ் நடித்திருந்தார். ஸ்ரீகாந்த் பொல்லா கண்பார்வை குறைபாடுடன் பிறந்து பல போரட்டங்களைத் தாண்டி கேம்ப்ரிட்ஜில் எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் படித்த முதல் சர்வதேச மாணவராக அசத்தியிருந்தார்.

இவரது பயோப்பிக்கில் நடிகை ஜோதிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தேசிய விருது குறித்து நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது:

பட்ஜெட், ரிலீஸ் தேதி என அனைத்து சூழ்நிலைகளிலும் போராடிய ஒரு படம் தேசிய விருது வென்றுள்ளதெனில் அது அந்தப் படத்தின் தூய நோக்கம், திரைக்கதை, ஆக்கத்தினால் மட்டுமே. இது படக்குழுவுக்கு மிகவும் உணர்ச்சிகரமானது.

துஷார், நிதி ஹிரானந்தனி மற்றும் டி சீரிஸ் தங்களது இதயத்தில் இருந்து நேரடியாக இந்தப் படத்தை எடுத்தார்கள். விழிப்பார்வை சவால்கொண்ட ஒரு மனிதர் எப்படி சமூகத்தின் விதிகளையும் மாற்றி முதல் எம்ஐடி மாணவராக மட்டுமில்லாமல் வெற்றிபெற்ற தொழிலதிபராகவும் இருந்தவரின் அழகான வாழ்க்கையையும் அதையும் தாண்டியவற்றையும் இந்த உலகத்திற்கு எடுத்துக்கூற இவர்கள் விரும்பினார்கள்.

ராஜ்குமார் ராவ் சிறப்பான நடிப்பும் இயக்குநராக துஷாரின் நோக்கமும் விருப்பமும் இந்த தைரியமான கதையைக் கூற முடிந்தது. இதற்காக அவர்களுக்கு நன்றி மட்டுமே கூற முடியாது. அதேசமயம் இதில் ஸ்ரீகாந்தின் சிறகுக்கு காற்றாக அமைந்த தேவிகா என்ற ஆசிரியையாக நடித்ததுக்குப் பெருமையாக இருக்கிறது. இது என் இதயத்துக்கு நெருக்கமான கதாபாத்திரம். 25 ஆண்டுகளுக்குப் பிறகு நான் பாலிவுட்டில் கையெழுதிட்ட படமும் இதுதான்.

இது வெறுமனே தேசிய விருது மட்டுமல்ல; ஆனால், படக்குழுவிற்கு மிகவும் உணர்ச்சி மிகுந்தது. எங்கள் இதயங்களில் எப்போதும் செதுக்கப்பட்டிருக்கும். பெருமையாக இருக்கிறது எனக் கூறியுள்ளார்.

Summary

A character close to the heart... Jyothika takes pride in the National Award for srikanth film

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.