FOLLOW US

ON GOOGLE DISCOVER

9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

3-வது முறையாக கிடைத்த ஆசிர்வாதம்: தேசிய விருது பற்றி ஜிவி பிரகாஷ் நெகிழ்ச்சி!

மூன்றாவது முறையாக தேசிய விருது வென்றது பற்றி ஜிவி பிரகாஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News image

ஜிவி பிரகாஷ்

Updated On :18 ஜூலை 2026, 9:58 pm IST

72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பில் சிறந்த பின்னணி இசைக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமரன் (2024) படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கு அவருக்கு தேசிய விருது வழங்கப்படவுள்ளது.

தொடர்ந்து 2-வது ஆண்டாக ஜிவி பிரகாஷ் தேசிய விருது பெறுகிறார். கடந்தாண்டு சிறந்த இசைக்கு (பாடல்கள்) வாத்தி (2022) படத்திற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

தேசிய விருது அறிவிக்கப்பட்டது பற்றி ஜிவி பிரகாஷ் நெகிழ்ச்சியுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மூன்றாவது முறையாகக் கிடைத்த பெரிய ஆசீர்வாதம். அமரன் திரைப்படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை மதிப்புடன் ஏற்றுக்கொள்கிறேன்.

இந்த மதிப்புமிக்க கௌரவத்தை 3-வது முறையாகப் பெறுவது உண்மையிலேயே ஒரு ஆசிர்வாதம்.அதை நான் நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறேன். இந்த அங்கீகாரத்திற்கு நடுவர் குழுவினருக்கும் தேர்வு குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

என் மீது நம்பிக்கை வைத்து அமரன் படத்தில் வாய்ப்பு வழங்கிய தயாரிப்பாளர் கமல்ஹாசன் சாருக்கு எனது மனமார்ந்த நன்றி. இந்தப் பயணத்தில் எனக்கு அசைக்க முடியாத ஆதரவை வழங்கிய இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கு எனது நன்றி.

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் அமரன் திரைப்படத்தின் அனைத்து நடிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.

அனைத்திற்கும் மேலாக, என் ரசிகர்களுக்கு நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். உங்களுடைய அசைக்க முடியாத அன்பு, தொடர்ச்சியான ஊக்கம், என் மீதான நம்பிக்கை ஆகியவை எப்போதும் என் மிகப்பெரிய பலமாக இருந்துள்ளது.

நான் உருவாக்கும் ஒவ்வொரு இசைக் குறிப்பும் உங்கள் அனைவருக்கும் அர்பணிக்கப்படுகிறது. இந்த விருது எனக்குச் சொந்தமானதைப் போன்றே உங்கள் அனைவருக்கும் சொந்தமானது” எனத் தெரிவித்துள்ளார்.

இவ்விருதுடன் மொத்தம் 3 தேசிய விருதுகளை ஜிவி பிரகாஷ் பெற்றுள்ளார்.

Summary

GV Prakash on winning the National Award for the third time.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.