தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்
/

மெய்யழகன் படத்துக்கு சிறந்த ஒலிக்கலவைக்காக தேசிய விருது!

மெய்யழகன் திரைப்படத்துக்கு தேசிய விருது கிடைத்துள்ளது பற்றி...

News image

மெய்யழகன் - கோப்புப்படம்

Updated On :18 ஜூலை 2026, 6:51 pm IST

மெய்யழகன் திரைப்படத்தில் சிறந்த பின்னணி ஒலிக்கலவைக்காக (Best Sound Mixing) சுரேன் ஜி என்பவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான மெய்யழகன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் பல்வேறு பிரபலங்களால் பாராட்டப்பெற்றது.

96 திரைப்படத்தை இயக்கிய சி. பிரேம் குமார் இப்படத்தை இயக்க நடிகர்கள் கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்த நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 72 வது தேசிய விருதுகள் பட்டியலில் மெய்யழகன் திரைப்படத்தில் பணியாற்றிய சுரேன் ஜி என்பவருக்கு சிறந்த பின்னணி ஒலிக்கலவைக்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

A National Award for the movie Meiyazhagan!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.