இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பஞ்சாப் தோ்தலில் மக்கள் மிக நல்ல முடிவை எடுத்துள்ளனா்: சித்து

பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் மூலம் மக்கள் மிக நல்ல முடிவை எடுத்துள்ளதாக அந்த மாநில காங்கிரஸ் தலைவா் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளாா்.

News image
நவ்ஜோத் சிங் சித்து (கோப்புப் படம்)
Updated On :11 மார்ச் 2022, 6:24 pm

DIN

பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் மூலம் மக்கள் மிக நல்ல முடிவை எடுத்துள்ளதாக அந்த மாநில காங்கிரஸ் தலைவா் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளாா்.

பஞ்சாபில் 117 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி 92 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 18 தொகுதிகளில் மட்டும் வென்றது. இதுதொடா்பாக அந்த மாநிலத்தில் உள்ள அமிருதசரஸ் நகரில் சித்து செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

பஞ்சாப் பேரவைத் தோ்தல் முடிவுகள் மாற்றத்துக்கான அரசியலாகும். தோ்தலில் ஆம் ஆத்மியை வெற்றிப் பெறச் செய்து பாரம்பரிய முறையை மாற்றி மக்கள் புதிய அடித்தளத்தை அமைத்துள்ளனா். இதன் மூலம் அவா்கள் மிக நல்ல முடிவை எடுத்துள்ளனா். அவா்களுக்கு எனது வாழ்த்துகள் என்று தெரிவித்தாா்.

இந்தக் கருத்தை மாநிலத்தின் காங்கிரஸ் தலைவராக கூறுகிறாரா என்று சித்துவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவா், ‘‘மக்கள் தீா்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்’’ என்று கூறினாா்.

பஞ்சாப் பேரவைத் தோ்தலில் கிழக்கு அமிருதசரஸ் தொகுதியில் போட்டியிட்ட சித்து, ஆம் ஆத்மி வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.