துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

காங்கிரஸ் தலைவர் யார்?: 2.30 மணி நேரம் நடைபெற்ற செயற்குழு கூட்டம்

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு பிறகு தில்லியில் முதல்முறையாக நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டம் 2.30 மணி நேரம் நடைபெற்றது.

News image
Updated On :13 மார்ச் 2022, 2:27 pm

DIN

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு பிறகு தில்லியில் முதல்முறையாக நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டம் 2.30 மணி நேரம் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வது, 5 மாநில தேர்தல் தோல்விக்கான காரணம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று மாலை காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கியது. 5 மாநிலத் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து விவாதிப்பதற்காக இந்தக் கூட்டம் நடைபெற்றது.

எனினும், காங்கிரஸ் தலைவராக மீண்டும் ராகுல் காந்தி  பொறுப்பேற்றுக்கொள்வது குறித்தும், காங்கிரஸ் கட்சியில் முழுமையாக சீர்திருத்தங்கள் செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

2024 தேர்தலில் காங்கிரஸ் உடன் இணைந்து செயல்படத் தயார் என்று மம்தா பானர்ஜி தெரிவித்திருந்த நிலையில், அது குறித்தும் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 

இதோடு மட்டுமல்லாமல், 2024 தேர்தலில் காங்கிரஸ் உடன் இணைந்து செயல்படத் தயார் என்று மம்தா பானர்ஜி தெரிவித்திருந்த நிலையில், அது குறித்தும் செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சுமார் 2.30 மணி நேரம் விவாதம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் செல்போன் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதனால் விவாதிக்கப்பட்ட முழு விவரங்களை அறிக்கை வாயிலாக காங்கிரஸ் கட்சி வெளியிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்தக் கூட்டத்தில் கே.சி. வேணுகோபால், குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பூபேஷ் பாகல் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.