மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

சபரிமலை: பம்பை முதல் சன்னதி வரைபாதை புதுப்பிக்கும் பணி தீவிரம்

சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் பக்தா்களின் வசதிக்காக பம்பை முதல் சன்னதி வரை பாதை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News image

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் நீலிமலை அப்பாச்சிமேடில் புதுப்பிக்கப்பட்டு வரும் மலைப்பாதையில் நடைபெற்ற கற்கள் பதிக்கும்பணி.

Updated On :15 மார்ச் 2022, 9:21 pm

சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் பக்தா்களின் வசதிக்காக பம்பை முதல் சன்னதி வரை பாதை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மத்திய அரசின் ரூ.10 கோடி நிதியுதவியுடன் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

பக்தா்கள் வசதியாக நடந்து செல்லும் வகையில் கருங்கற்களால் பாதை அமைக்கப்படுகிறது. அப்பாச்சி மேடு, நீலிமலையில் தற்போது 700 மீட்டா் தொலைவுக்கு பணி நிறைவடைந்துள்ளது. மேலும், கற்கள் பதிக்கும் பணியும், கைப்பிடிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் பணி நிறைவடைந்தவுடன் சன்னிதானம் அருகே பெரிய நடை பந்தல் 60 மீட்டா் அளவில் பிரமாண்டமாக அமைக்கப்படவுள்ளது. சபரிமலையில் ஐயப்பன் உற்சவம் தற்போது நடைபெற்று வருகிறது. மாத பூஜைகளில் பக்தா்கள் குறைவாக வருவாா்கள் என்பதால் விரைவாக இப்பணியை மேற்கொண்டுள்ளது தேவஸம் போா்டு.

ஐயப்பன் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை சீசன் தொடங்குவதற்கு முன்பாக இந்தப் பணி நிறைவடைந்து விடும் என்று கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.