முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

உத்தரப்பிரதேசத்தில் கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிப்பு

உத்தரப்பிரதேசத்தில் கரோனாவின் மூன்றாவது அலை கட்டுக்குள் வந்த நிலையில், அனைத்து கட்டுப்பாடுகளையும் முழுவதுமாக அம்மாநில அரசு தளர்த்தியுள்ளது. 

News image
உத்தரப்பிரதேசத்தில் கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிப்பு
Updated On :17 மார்ச் 2022, 1:50 pm

DIN

உத்தரப்பிரதேசத்தில் கரோனாவின் மூன்றாவது அலை கட்டுக்குள் வந்த நிலையில், அனைத்து கட்டுப்பாடுகளையும் முழுவதுமாக அம்மாநில அரசு தளர்த்தியுள்ளது. 

இதுதொடர்பாக வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிட்ட அம்மாநில அரசு, மாநிலம் முழுவதும் நீச்சல் குளங்கள், நீரியல் பூங்காக்கள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் முழுவதுமாக இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

புதிய அறிவிப்புகளின்படி திருமணங்கள் மற்றும் இதர நிகழ்ச்சிகளில் முழு எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொள்ள விதிக்கப்பட்டிருந்த தடை திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதேசமயம் கரோனா தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நிகழ்ச்சிகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

முன்னதாக கடந்த சில நாள்களுக்கு முன்பாக உணவகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், திரையரங்குகள் மீதான கட்டுப்பாடுகளையும் மாநில அரசு நீக்கியுள்ளது. அவை அனைத்தும் 100 சதவீதம் முழுமையாகச் செயல்பட அனுமதி அளித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.