சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

காங்கிரஸ் தலைவர் யார்? சோனியாவை சந்தித்த குலாம்நபி ஆசாத்

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பின் சோனியா காந்தியை காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் சந்தித்துப் பேசினார்.

News image
குலாம்நபி ஆசாத்
Updated On :18 மார்ச் 2022, 2:21 pm

DIN

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பின் சோனியா காந்தியை காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் சந்தித்துப் பேசினார்.

உத்தரப்பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்த நிலையில் அக்கட்சிக்குள் அரசியல் சச்சரவுகள் ஏற்பட்டுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் உள்ள மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத் தலைமையில் கட்சியின் எதிர்காலம் குறித்து ஆலோசனை நடத்திய நிலையில், சோனியா காந்தி அவரை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை தில்லியில் சோனியா காந்தியை காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் சந்தித்துப் பேசினார். 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், “5 மாநிலங்களில் தோல்விக்கான காரணங்கள் குறித்து செயற்குழுவிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. வரும் சட்டசபை தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது” எனத் தெரிவித்தார்.

மேலும் , “சோனியா காந்தியுடனான சந்திப்பு சிறப்பாக இருந்தது. அவர் தலைவராக தொடர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக முடிவெடுத்திருந்தனர். இதுதொடர்பாக எங்களிடம் சில கருத்துகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன” எனவும் குலாம்நபி ஆசாத் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.