பாகிஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ, ஜம்மு காஷ்மீர் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி அளித்துள்ள இந்தியா, 'உள்நாட்டு விவகாரமான ஜம்மு காஷ்மீர் குறித்து சீன அமைச்சர் தேவையின்றி கருத்து தெரிவித்துள்ளார்' எனக் குறிப்பிட்டுள்ளது.
செய்தியாளர் சந்திப்பில் சீன அமைச்சரின் கருத்து குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, "யூனியன் பிரதேசமாக உள்ள ஜம்மு காஷ்மீர் தொடர்பான பிரச்னைகள் அனைத்தும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரமாகும். இதில், சீனா போன்ற நாடுகள் கருத்து சொல்தவற்கு உரிமை இல்லை. சீனாவின் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து பொதுவெளியில் இந்திய கருத்து தெரிவித்ததில்லை என்பதை அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்" என்றார்.
முன்னதாக, பாகிஸ்தானில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய வாங் யீ, "இஸ்லாமிய நண்பர்கள் பலர் காஷ்மீர் குறித்து இன்று நமது கவனத்திற்கு கொண்டு வந்தனர். அதே நம்பிக்கையை சீனாவும் பகிர்ந்து கொள்கிறது." என்றார்.
அடுத்த இரண்டு நாள்களில், வாங் யீ தில்லிக்கு பயணம் மேற்கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இரண்டு நாடுகளும் ஆலோசனை மேற்கொண்டுவரும் நிலையில், காஷ்மீர் குறித்த சீனாவின் கருத்துக்கு இந்தியா ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | ஒரு மாதத்தை எட்டியது உக்ரைன்- ரஷியா போா்
பாகிஸ்தானின் வியூக ரீதியான நட்பு நாடாக சீனா விளங்குகிறது. இதற்கு மத்தியில், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் நிலைபாட்டுக்கே சீனா ஆதரவு தெரிவித்து வந்துள்ளது.
இதேபோல, கடந்த மாதம், ஜம்மு காஷ்மீர் குறித்து பாகிஸ்தான், சீனா வெளியிட்டிருந்த கூட்டறிக்கைக்கு இந்திய கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

