எல்லையிலிருந்து சீன படைகள் விலக வேண்டும்: ஜெய்சங்கர்

இந்திய எல்லைப் பகுதிகளிலிருக்கும் சீன படைகள் விரைந்து அங்கிருந்து வெளியேற வேண்டும் சீன வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தி உள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

இந்திய எல்லைப் பகுதிகளிலிருக்கும் சீன படைகள் விரைந்து அங்கிருந்து வெளியேற வேண்டும் சீன வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தி உள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு கிழக்கு லடாக் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய - சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. இதையடுத்து இரு நாட்டு உறவிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இரு நாட்டு எல்லை விவகாரம் குறித்துப் பேச சீன வெளியுறவுத்துறை அமைச்சா் வாங் யி இந்தியா வந்துள்ளார். இன்று காலை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்துப் பேசிய வாங் யி, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

பேச்சுவார்த்தையில் கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருக்கும் படைகளை முழுமையாகத் திரும்பப் பெறுவது குறித்து இந்தியா சாா்பில்  எல்லைப் பகுதிகளிலிருக்கும் சீன படைகள் விரைந்து அங்கிருந்து வெளியேற வேண்டும்  என வலியுறுத்தப்பட்டுள்ளதாக வெளியுறத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

மேலும், பேச்சுவார்த்தையின்போது சீனாவில் மருத்துவம் பயிலும் இந்திய மாணவர்களின் நிலைகுறித்தும் விவாதிக்கப்பட்டதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com