/

மும்பையில் சாலை விபத்து: 2 குழந்தைகள் பலி 

முப்பை புறநகர்ப் பகுதியில் கனரக வாகனம் ஒன்று ஆட்டோ மீது மோதிய விபத்தில் குழந்தைகள் இருவர் உயிரிழந்தனர். 

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 8:47 am

DIN

முப்பை புறநகர்ப் பகுதியில் கனரக வாகனம் ஒன்று ஆட்டோ மீது மோதிய விபத்தில் குழந்தைகள் இருவர் உயிரிழந்தனர். 

விபத்து குறித்து காவல் அதிகாரிகள் கூறியது, 

கிழக்கு போரிவலி என்ற இடத்தில் பிரவேந்திர குமார் குப்தா(35) தனது ஆட்டோவில் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வந்துகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

மேம்பாலம் அருகே வேகமாக வந்த கனரக வாகனம் ஆட்டோவின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குழந்தைகள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தம்பதியினர் படுகாயம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கனரக வாகனத்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக தஹிசார் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.