எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பிரதமரை நாளை சந்திக்கிறார் ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர்

இந்தியாவிற்கு வருகைதரவுள்ள ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ், பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்திக்கவுள்ளார். 

News image
ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர்
Updated On :31 மார்ச் 2022, 5:08 pm

DIN

இந்தியாவிற்கு வருகைதரவுள்ள ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ், பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்திக்கவுள்ளார். 

கடந்த வாரம் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ இந்தியாவிற்கு வருகைப் புரிந்ததைத் தொடர்ந்து தற்போது ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் வருகைப்புரியவுள்ளார். 

உக்ரைனில் போர்ப் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்தியா - ரஷியா இடையிலான வர்த்தகம் மற்றும் இதர உறவுகளை மேம்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. 

இதற்காக இரு நாள்கள் பயணமாக ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் நாளை (ஏப்ரல் 1) மாலை தில்லிக்கு வருகிறார். அவர் நாளை பிரதமர் நரேந்திர மோடியையும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் சந்தித்து பேசவுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.