ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

வருவாய் பற்றாக்குறை மானியமாக 14 மாநிலங்களுக்கு ரூ. 7,183. 42 கோடி விடுவிப்பு

நிதிப் பகிா்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியத்தின் 2-வது மாதத் தவணை தொகையாக, 14 மாநிலங்களுக்கு ரூ. 7,183. 42 கோடியை வெள்ளிக்கிழமை மத்திய நிதி அமைச்சகம் விடுவித்துள்ளது.

News image
Updated On :6 மே 2022, 8:02 pm

 நமது நிருபர்

நிதிப் பகிா்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியத்தின் 2-வது மாதத் தவணை தொகையாக, 14 மாநிலங்களுக்கு ரூ. 7,183. 42 கோடியை வெள்ளிக்கிழமை மத்திய நிதி அமைச்சகம் விடுவித்துள்ளது.

ஆந்திரம், அஸ்ஸாம், இமாசல பிரதேசம், கேரளம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், உத்தரகண்ட், பஞ்சாப் மற்றும் பல வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு நிதிப் பகிா்வுக்கு பிந்தையை வருவாய் பற்றாக்குறை மானியமாக 2022-23-ம் நிதியாண்டிற்கு மொத்தம் ரூ.86,201 கோடியை அளிக்க 15-ஆவது நிதி ஆணையம் பரிந்துரைத்திருந்தது.

இந்தத் தொகை சமமான 12 மாத தவணைகளில் விடுவிக்கப்படுகிறது. இதன்படி 2-ஆவது மாதத் தவணை தொகையாக ரூ. 7,183. 42 கோடியை மத்திய நிதியமைச்சகத்தால் விடுவிக்கப்பட்டுள்ளது. தற்போது விடுவிக்கப்பட்ட தொகையுடன் இதுவரை மொத்தம் ரூ.14,366.84 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.