வங்கக் கடலில் உருவான தீவிர புயல் அசானி, திங்கள்கிழமை மாலை நிலவரப்படி ஆந்திர - ஒடிசா மாநில கடற்கடைகளுக்கு இடையே நெருங்கி வருகிறது.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் அடுத்தடுத்து வலுவடைந்து, ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு இலங்கை நாடு வழங்கிய ‘அசானி’ என்று பெயரிடப்பட்டது.
இந்தப் புயல் மேலும் தீவிரமாகி ஒடிஸா கடற்கரை நோக்கி நகர்ந்தது. திங்கள்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து 450 கி.மீ. தொலைவிலும் ஒடிசா மாநிலம் புரியிலிருந்து 610 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்ததாவது, வங்கக் கடல் பகுதியில் நிலவும் அசானி புயல், இன்று காலை நிலவரப்படி மத்திய மேற்கு மற்றும் அதனை ஒடியுள்ள தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவியது. இதுமேலும் வட மேற்கு திசையில் மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வட ஆந்திரா - ஒடிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவுகிறது.
அதன்பிறகு வடக்கு - வடகிழக்கு திசையில் ஒடிசா கடற்கரை ஒட்டிய வட மேற்கு வங்கக் கடல் பகுதியை நோக்கி நகரக் கூடும். இது படிப்படியாக புயலாக வலுவிழக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


