மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

இந்தூரில் சட்டவிரோத துப்பாக்கிகள் தயாரித்த கும்பல் கைது

இந்தூரில் சட்ட விரோதமாக ஆயுதங்களைத் தயாரித்து விற்பனை செய்த கும்பல் மூவரை போலீசார் கைது செய்தனர். 

News image
Updated On :11 மே 2022, 12:34 pm

இந்தூரில் சட்ட விரோதமாக ஆயுதங்களைத் தயாரித்து விற்பனை செய்த கும்பல் மூவரை போலீசார் கைது செய்தனர். 

சட்டவிரோத கும்பலிடம் இருந்து 15 கைத்துப்பாக்கிகள் மற்றும் 590 துப்பாக்கி குழல்களையும் போலீசார் கைப்பற்றினர். 

ரகசிய தகவலின்பேரில் அகல் சிங் என்பவரை கைது செய்ததாக குற்றப்பிரிவு காவல்துறை நிமிஸ் அகர்வால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

சிங் வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில், சட்டவிரோதமாக துப்பாக்கிக் குழல்களை தயாரித்த பிரேம் சிங் என்ற கோலு மற்றும் கிருஷ்ணகாந்த் ஜா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

இந்த கும்பல் இந்தூரில் துப்பாக்கி குழல்களும், புர்ஹான்பூர், கர்கோன், பர்வானி மற்றும் கந்த்வா மாவட்டங்களில் உள்ள தொலைதூர பகுதிகளில் சட்டவிரோதத் துப்பாக்கிகளையும் தயாரித்து வந்தது.

இந்த ஆயுதங்கள், பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டன. மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.