புது தில்லி: நாட்டில் நேற்றைய கரோனா பாதிப்பு 2,827 ஆக இருந்த நிலையில், இன்று புதிதாக 2,841பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 3,295 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்கள் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத் துறை தினசரி வெளியிட்டு வருகின்றது. இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள தகவலின்படி,
நாட்டில் கடந்த சில நாள்களாக ஒரு நாள் தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 2,841 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4,31,16,254 ஆக உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 9 பேர் உயிரிழந்ததால் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,190 ஆக உள்ளது.
நேற்று ஒரேநாளில் 3,295 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,25,73,460 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 18,604 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை 1,90,99, 44,803 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 14,03,220 கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 84,29,44,795 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,86,628 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | எல்ஐசி பொதுப் பங்கு வெளியீடு: 10 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சனந்த் நடிக்கும் ஹார்ட்டின் பட டிரைலர் வெளியீடு!

விஜய் அன்பளிப்பு! ரிக்ஷா தொழிலாளர்களுக்கு இலவச மழை கோட்டுகள்!

அர்ஷ்தீப் சிங்குக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா களமிறங்குகிறாரா?

ரிலையன்ஸ் பங்குகள் 1 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவு!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



