நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மத்தியப் பிரதேசத்தில் வேட்டைக்காரர்கள் துப்பாக்கிச்சூடு: 3 காவலர்கள் பலி

மத்தியப் பிரதேசத்தில் உள்ள வனப்பகுதியில் வேட்டைக்காரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 காவலர்கள் பலியானார்கள். 

News image
Updated On :14 மே 2022, 10:52 am

DIN

மத்தியப் பிரதேசத்தில் உள்ள வனப்பகுதியில் வேட்டைக்காரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 காவலர்கள் பலியானார்கள். 

மத்தியப் பிரதேச மாநிலம், குணா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் அரியவகை மான்களை வேட்டையாடுவதற்காக வேட்டைக்காரர்கள் முகாமிட்டுள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு காவல்துறையினர் இன்று அதிகாலை விரைந்தனர். அப்போது வேட்டைக்காரர்களை பிடிக்க காவல்துறையினர் முயன்றனர். ஆனால் அவர்கள் தங்களுடைய துப்பாக்கியால் காவலர்களை நோக்கி சுட்டனர்.

இதற்கு காவலர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர். பின்னர் வேட்டைக்காரர்கள் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பித்துவிட்டனர். இந்த சம்பவத்தில் 3 காவலர்கள் மற்றும் வேட்டைக்காரர் ஒருவர் பலியாகினர். மேலும் காவல்துறையினரின் வாகன ஓட்டுநரும் காயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து வனப்பகுதியில் இருந்து பல மான்களின் உடல்கள் மற்றும் மயில் பாகங்களை காவல்துறையின்ர் மீட்டுள்ளனர்.

இதனிடையே இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார். வேட்டைக்காரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 காவலர்கள் பலியான சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.