நாட்டில் புதிதாக 2,858 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 11 பேர் பலி
நாட்டில் இன்று புதிதாக 2,858 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


நாட்டில் நேற்றைய கரோனா பாதிப்பு 2,841 ஆக இருந்த நிலையில், இன்று(சனிக்கிழமை) புதிதாக 2,858 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 3,355 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் உயிரிழந்ததால் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,201 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று ஒரேநாளில் 3,355 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,25,76,815 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 18,096 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை 1,91,15,90,370 கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 15,04,734 கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்யத் தடை: மத்திய அரசு அறிவிப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...