பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் குருநானக் தேவ் மருத்துவமனை தீ விபத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், அவர் தற்போதைய நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மருத்துவனையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், குருநானக் தேவ் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த துரதிஷ்ட செய்தியை அறிந்தேன். தீயினை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு வருகிறார்கள். கடவுளின் கருணையால் மருத்துவமனை தீ விபத்தில் எந்த ஒரு உயிரிழப்பும் இல்லை. மீட்பு நடவடிக்கைகளை அவர் தொடர்ந்து கண்காணித்து வருவதாக பதிவிட்டுள்ளார்.
பஞ்சாப் மாநில முதல்வர் மட்டுமல்லாது, ஷிரோமனி அகாலி தளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பதால் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்களும் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் நேரக்கூடாது என கடவுளை பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர்.
குருநானக் தேவ் மருத்துவமனையில் ஏற்பட்ட இந்த தீயினை கட்டுக்குள் கொண்டுவர 8 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

உங்கள் சிறுநீரகம் நலமா? உறுதி செய்யும் சில கேள்விகள்!

இந்தியர்கள் நல்ல நடிகர்கள்; ரஷிய எண்ணெய் வாங்க அனுமதி! - அமெரிக்க நிதியமைச்சர் பேச்சு!

போர் எதிரொலி! பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

வெளியானது 3.26 நிமிட துரந்தர் 2 படத்தின் டிரைலர்!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

