ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, சரணடைய காலஅவகாசம் கோரிய நிலையில் உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
34 ஆண்டுகளுக்கு முன்பு காருக்கு வழிவிடுவது தொடா்பான பிரச்னையில் முதியவரை தாக்கி உயிரிழப்பு ஏற்படக் காரணமாக இருந்த வழக்கில், முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
இதையும் படிக்க | சரணடைய ஒரு வார காலம் அவகாசம் கோரி நவ்ஜோத் சிங் சித்து மனு
இதையடுத்து, நவ்ஜோத் சிங் சித்துவின் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, சித்து சரணடைய சில வாரங்கள் கால அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். சித்துவின் உடல்நலக் காரணங்களை காட்டி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்விடம் மனு அளித்தார்.
ஆனால், அபிஷேக் சிங்வியின் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதனால் இன்று பிற்பகலே பாட்டியாலா நீதிமன்றத்தில் சித்து சரணடைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க | முதியவரை தாக்கிய வழக்கு: சித்துவுக்கு ஓராண்டு கடுங்காவல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செந்தூரில் முதல் நாளில் 6 போ் மனு தாக்கல்

துப்பாக்கியை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நபா் கைது

வடிகால்களில் தூா்வாருவதில் ரேகா குப்தா நிா்வாகம் தோல்வி: தேவேந்தா் யாதவ் சாடல்

ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் குழந்தை இறப்பு: பொதுமக்கள் போராட்டம்
வீடியோக்கள்

#tnassemblyelections | வேட்புமனு தாக்கல் செய்த முக்கியத் தலைவர்கள்! |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | களத்துக்கு வந்த முதல்வர் வேட்பாளர்கள்! | News & Views | E-20 |
தினமணி வீடியோ செய்தி...

IPL 2026 | பந்துவீசுவாரா கிரீன்?: ரஹானே கேள்விக்குப் பதிலளித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா |
தினமணி வீடியோ செய்தி...

“எடப்பாடியால் பாஜகவை எதிர்க்க முடியாது”: காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ்
தினமணி வீடியோ செய்தி...

