உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

பெகாஸஸ் வழக்கு: விசாரணை குழுக்கு கூடுதல் அவகாசம்

பெகாஸஸ் வழக்கில் விசாரணைக் குழுவுக்கு கூடுதல் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூன் 20ஆம் தேதி அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Published on

பெகாஸஸ் வழக்கில் கூடுதல் அவகாசம் வழங்கி நான்கு வார காலகத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய நிபுணர் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

விசாரணை மே மாத இறுதிக்குள் நிறைவடைந்துவிடும் என்றும் பின்னர், மேற்பார்வையிடும் நீதிபதியிடம் விசாரணை குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என். வி. ரமணா தெரிவித்துள்ளார்.

பின்னர், நிபுணர் குழுவின் அறிக்கையை மேற்பார்வையிடும் நீதிபதி ஆய்வு செய்து இறுதி செய்ய வேண்டும் என்றும் ஜூன் 20ஆம் அதை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com