தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நாட்டில் புதிதாக 2,323 பேருக்கு கரோனா தொற்று; 25 பேர் பலி

நாட்டில் நேற்றைய கரோனா பாதிப்பு 2,259 ஆக இருந்த நிலையில், இன்று புதிதாக  2,323 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :21 மே 2022, 4:12 am

DIN

புது தில்லி: நாட்டில் நேற்றைய கரோனா பாதிப்பு 2,259 ஆக இருந்த நிலையில், இன்று புதிதாக  2,323 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 2,346 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்கள் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத் துறை தினசரி வெளியிட்டு வருகின்றது. இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள தகவலின்படி,

நாட்டில் கடந்த சில நாள்களாக ஒரு நாள் தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 2,323 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4,31,34,145 ஆக உள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் 25 பேர் உயிரிழந்ததால் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,348 ஆக உள்ளது. உயிரிழந்தோரின் விகிதம்1.22 சதவிகிதமாக குறைந்துள்ளது.

நேற்று ஒரேநாளில் 2,323 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,25,94,801 ஆக உயர்ந்துள்ளது.  குணமடைந்தோரின் விகிதம் 98.75 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

தற்போது 14,996 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.03 சதவிகிதமாக உள்ளது. 

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை 1,92,12,96,720 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 15,32,383 கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.