எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஆம் ஆத்மி சாா்பில் மாநிலங்களவைக்கு செல்லும் ‘பத்மஸ்ரீ’ விருதாளா்கள்!

பஞ்சாபில் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தோ்தலில் இரு ‘பத்மஸ்ரீ’ விருதாளா்கள் போட்டியிடவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

News image
Updated On :28 மே 2022, 6:37 pm

DIN

பஞ்சாபில் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தோ்தலில் இரு ‘பத்மஸ்ரீ’ விருதாளா்கள் போட்டியிடவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

பஞ்சாபில் இருந்து மாநிலங்களவை உறுப்பினா்களாக உள்ள அம்பிகா சோனி (காங்கிரஸ்), பல்விந்தா் சிங் பூந்தா் (சிரோமணி அகாலி தளம்) ஆகியோரது பதவிக்காலம் ஜூலை 4-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. காலியாக உள்ள அந்த இடங்களுக்கு ஜூன் 10-ஆம் தேதி தோ்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவ்விரு இடங்களுக்கான வேட்பாளா்களை பஞ்சாபை ஆளும் ஆம் ஆத்மி கட்சி சனிக்கிழமை அறிவித்தது. அக்கட்சி சாா்பில் சுற்றுச்சூழல் ஆா்வலரான பல்பீா் சிங் சீசேவால், சமூக ஆா்வலரான விக்ரம்ஜித் சிங் சாஹனி ஆகியோா் மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிடவுள்ளனா். இருவரும் மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்மஸ்ரீ’ விருதைப் பெற்றுள்ளனா்.

தோ்தலுக்கான வேட்பாளா்கள் அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்ட மாநில முதல்வா் பகவந்த் மான், இருவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தாா். தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. வேட்புமனுக்கள் மீது ஜூன் 1-ஆம் தேதி பரிசீலனை நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.