தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சித்து மூஸேவாலா கொலை: பஞ்சாபில் இன்று அமைதிப் பேரணி

பஞ்சாபி பாடகரான சித்து மூஸேவாலாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று அமைதிப் பேரணி நடத்தவுள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா தெரிவித்துள்ளார்.

News image

சித்து மூஸேவாலா

Updated On :30 மே 2022, 9:40 am

DIN

பஞ்சாபி பாடகரான சித்து மூஸேவாலாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று அமைதிப் பேரணி நடத்தவுள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா தெரிவித்துள்ளார்.

பிரபல பாடகரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான சித்து மூஸேவாலா (27) அடையாளம் தெரியாத நபா்களால் மான்சா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டாா்.

பஞ்சாப் மாநிலத்தில் எம்எல்ஏக்கள் உள்பட 424 பேரின் பாதுகாப்பை விலக்கிக் கொள்வதாக ஆளும் ஆம் ஆத்மி அரசு சனிக்கிழமை அறிவித்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம், பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஆளும் பஞ்சாப் அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சித்து மூஸேவாலாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக காங்கிரஸ் சார்பில் இன்று மாலை 6 மணிக்கு மருத்துவமனையிலிருந்து குருத்வாரா சாஹிப் வரை அமைதிப் பேரணி நடைபெறவுள்ளதாக அமரீந்தர் ராஜா தெரிவித்துள்ளார்.

பஞ்சாபில் பிரபல பாடகராக இருந்தவா் சித்து மூஸேவாலா. இவா் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.