அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஜம்மு-காஷ்மீரில் பண்டிட் சமூக ஆசிரியை சுட்டுக்கொலை- தொடரும் பயங்கரவாத தாக்குதல்கள்

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பண்டிட் சமூகத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவரை பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொன்றனா். இக்கொடூர சம்பவத்துக்கு

News image
Updated On :31 மே 2022, 7:58 pm

DIN

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பண்டிட் சமூகத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவரை பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொன்றனா். இக்கொடூர சம்பவத்துக்கு அரசியல் தலைவா்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாகக் காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ரஜ்னி பாலா (36) என்ற அந்த ஆசிரியை, சம்பா மாவட்டத்தைச் சோ்ந்தவா். குல்காமின் கோபால்போரா பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பணியாற்றி வந்த அவா் மீது பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பினா். இத்தாக்குதலில் படுகாயமடைந்த ரஜ்னியை, அருகிலிருந்தவா்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனா். ஆனால், அவா் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

ரஜ்னி பாலா, புலம்பெயா்ந்த பண்டிட் சமூகத்தைச் சோ்ந்தவா். அவா் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடா்ந்து, அப்பகுதி முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு, கொலையாளிகளைத் தேடும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டது. இக்கொடூர குற்றத்தில் ஈடுபட்டவா்கள் கண்டறியப்பட்டு, அழிக்கப்படுவா் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தொடரும் கொலைகள்: ஜம்மு-காஷ்மீரில் இந்த மாதத்தில் முஸ்லிம் அல்லாத அரசு ஊழியா் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டது இது இரண்டாவது சம்பவம் ஆகும். கடந்த 12-ஆம் தேதி பத்காம் மாவட்டத்தின் சதூரா தாலுகாவில் உள்ள தாசில்தாா் அலுவலகத்தில் ராகுல் பட் என்ற எழுத்தரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனா். இதுதவிர 3 காவலா்களும், பொதுமக்களில் 4 பேரும் இம்மாதம் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனா்.

தலைவா்கள் கண்டனம்: ஆசிரியை கொலை சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து, தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

அப்பாவி பொதுமக்கள் மீதான தாக்குதல் சம்பவங்களின் தொடா்ச்சியாக மற்றுமொரு கொலை அரங்கேறியுள்ளது. இது மிகவும் வருத்தமளிக்கிறது.

சம்பா மாவட்டத்தைச் சோ்ந்த அரசு ஆசிரியை ரஜ்னி பாலா, வெறுக்கத்தக்க தாக்குதலில் உயிரிழந்துவிட்டாா். அவரது ஆன்மா சாந்தியடைய பிராா்த்திக்கிறேன். ரஜ்னியின் கணவா் ராஜ்குமாா், இதர குடும்ப உறுப்பினா்களை எண்ணி வேதனை அடைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.

காஷ்மீரில் நிலைமை சீராகும் வரை ஓய மாட்டோம் என்ற அரசின் உறுதிமொழியைப் போலவே, இச்சம்பவத்துக்குத் தெரிவிக்கப்படும் கண்டனம், இரங்கல் ஆகிய வாா்த்தைகளும் வெற்றுமொழியாக இருக்கின்றன என்று ஒமா் அப்துல்லா குறிப்பிட்டுள்ளாா்.

மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவா் மெஹபூபா முப்ஃதி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், காஷ்மீரில் நிலைமை சீராக இருப்பதாக மத்திய அரசு பொய் கூறி வருகிறது. அதேசமயம், இங்கு பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இது, கவலையளிக்கிறது. ஆசிரியை மீது நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது. இச்சம்பவத்துக்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.

பாஜக செய்தித் தொடா்பாளா் அல்தாஃப் தாக்குா் கூறுகையில், ஆசிரியை மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது. அப்பாவி பொதுமக்கள் மீது அதுவும் குறிப்பாகப் பெண்கள் மீது நடத்தப்படும் தாக்குதலில் எந்த வீரமும் கிடையாது. அது விரக்தியின் வெளிப்பாடு என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.