பள்ளிக்கல்வியில் தமிழ்நாட்டில் நிலை என்ன? வெளியானது மத்திய அறிக்கை

பள்ளிக்கல்விக்கான தர நிலை அறிக்கையில் தமிழ்நாடு கடந்த ஆண்டைக் காட்டிலும் பின்னடைவை சந்தித்துள்ளதாக மத்திய கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கல்வித்துறை ஆண்டுதோறும் பள்ளிக்கல்வியில் மாநிலங்கள் செயல்படும் நிலை குறித்து தரநிலை அறிக்கையை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் 2020-21ஆம் ஆண்டுக்கான மாநிலங்களின் பள்ளிக்கல்வி தர நிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  

நடப்பாண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் இரண்டாம் தர நிலையில் கேரளம், பஞ்சாப், சண்டிகர், மகாராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான், ஆந்திரப்பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. 

கடந்த ஆண்டு 2ஆம் தர நிலையில் இருந்த தமிழ்நாடு நடப்பாண்டு மூன்றாம் தர நிலைக்கு சரிந்துள்ளது. 

தர நிலை மதிப்பீட்டில் 1000 மதிப்பெண்களுக்கு 951 மதிப்பெண் மேல் பெறும் மாநிலங்கள் முதல் தர நிலையில் பட்டியலிடப்படும். ஆனால் நடப்பு காலத்தில் எந்த மாநிலங்களும் முதல்தர நிலையை எட்டவில்லை. 

அதேசமயம் கடந்த 2019-20  ஆண்டு நிலையைக் காட்டிலும் 27 மாநிலங்கள் தங்களது பள்ளிக்கல்வி நிலையை மேம்படுத்தியுள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அருணாச்சலப்பிரதேசம் மட்டுமே 7ஆம் தர நிலையில் உள்ள ஒரே ஒரு மாநிலமாகும். 

புதிதாக உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசமான லடாக் 10ஆம் தர நிலையிலிருந்து 4ஆம் தர நிலைக்கு உயர்ந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com