/

அமிர்தசரஸில் பிரதமர் மோடி: பாபா குரிந்தர் சிங் தில்லானை சந்திக்கிறார்!

அமிர்தசரஸில் உள்ள ராதா சோமி சத்சங்கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை புரிந்துள்ளார். 

News image
கோப்புப்படம்
Updated On :5 நவம்பர் 2022, 6:14 am

DIN

அமிர்தசரஸில் உள்ள ராதா சோமி சத்சங்கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை புரிந்துள்ளார். 

அங்கு அவர் சத்சங்கத்தின் தலைவர் பாபா குரிந்தர் சிங் தில்லானை சந்திக்க உள்ளார். 

முன்னதாக, வெள்ளிக்கிழமை பிரதமர் மோடி வெளியிட்ட டிவிட்டரில், 

பாபா குரிந்தர் சிங் தில்லான் தலைமையில் ஆர்எஸ்எஸ்பி பல சமூக முயற்சிகளில் முன்னணியில் உள்ளது. 

தேரா பாபா ஜெய்மால் சிங் என்று அழைக்கப்படும் ராதா சோமி சத்சங்கம் அமிர்தசரஸ் நகரத்திலிருந்து 45 கிமீ தொலைவில் உள்ள பியாஸ் நகரில் அமைந்துள்ளது.

நாடு முழுவதும், குறிப்பாக பஞ்சாப், ஹரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் இவரைப் பின்பற்றுபவர்கள் அதிகம். 

இமாச்சலப் பிரதேசத்தில் நவம்பர் 12-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்குள்ள சுந்தர்நகர் மற்றும் சோலன் ஆகிய இடங்களில் மோடி பொதுக்கூட்டங்களில் உரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.