இந்தியா-சீனா எல்லையின் கடைசி கிராம மக்களின் ஒரே கோரிக்கை

இந்தியா - சீனா எல்லைப் பகுதியில், இமாசலப் பிரதேசத்தில் இருக்கும் நாட்டின் கடைசி கிராமம் என்று கூறப்படும் கின்னௌர் மாவட்டம் சித்குல் கிராம மக்கள் தொடர்ந்து ஒரே ஒரு கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்தியா-சீனா எல்லையின் கடைசி கிராம மக்களின் ஒரே கோரிக்கை
இந்தியா-சீனா எல்லையின் கடைசி கிராம மக்களின் ஒரே கோரிக்கை

சித்குல்: இந்தியா - சீனா எல்லைப் பகுதியில், இமாசலப் பிரதேசத்தில் இருக்கும் நாட்டின் கடைசி கிராமம் என்று கூறப்படும் கின்னௌர் மாவட்டம் சித்குல் கிராம மக்கள் தொடர்ந்து ஒரே ஒரு கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள்.

அதாவது, கின்னௌர் மாவட்டம் சித்குல் கிராமத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தோ-திபெத் எல்லைக் காவல்படையை தும்தி கிராமத்துக்கு மாற்ற வேண்டும் என்பதே அது. இந்த கிராமத் சித்குலில் இருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இரண்டு காரணங்களுக்காக இவர்கள் இந்த ஒரு கோரிக்கையை முன் வைக்கின்றனர். அதாவது, இந்தப் பகுதியிலிருந்து இந்தோ-திபெத் எல்லைப் படையை மாற்றினால், தங்கள் கிராமத்தில் சுற்றுலாத் துறையை நன்கு வளர்த்துக் கொள்ளலாம் என்றும், தங்களது கிராமத்தைச் சுற்றிலும் இருக்கும் திறந்தவெளிப் பகுதிகளில் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொள்ள ஏராளமான நிலப்பரப்பு கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள்.

சுமார் 11,320 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்தக் கிராமத்தில் 650 பேர் வசிக்கிறார்கள். இவர்களில் 415 பேர் வாக்காளர்கள். 

தங்கள் பகுதிகளில் இந்தோ-திபெத் எல்லைப் படையின் கடுமையான கெடுபிடிகளால், சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமலும், வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியாமலும் கிராம மக்கள் அல்லப்படுவதாகக் கூறப்படுகிறது.

வெறும் கால்நடை மற்றும் சுற்றுலாவை மட்டுமே நம்பியிருக்கும் இந்த கிராமத்திலிருந்து எல்லைப் படையை மாற்றினால், இரண்டுமே நன்கு வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கிறார்கள் கிராம மக்கள்.

அந்தக் கிராமத்தில் நிலச்சரிவுகள் அதிகம் நடக்கும் அபாயம் இருப்பதால்தான் சுற்றுலாப் பயணிகளுக்கு கெடுபிடி விதிப்பதாகவும், நிலச்சரிவினால் யாரும் சிக்கிக் கொண்டால் மீட்பதற்காகவே, எல்லைக் காவல்படையினர் அங்கு பணியமர்த்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com