மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

2020, மார்ச் மாதத்துக்குப் பின் முதல் முறை: கரோனா பலி பதிவாகவில்லை

இந்தியாவில் கரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து பதிவாகி வருகிறது. இன்று காலை நிலவரப்படி 625 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

2020, மார்ச் மாதத்துக்குப் பின் முதல் முறை: கரோனா பலி பதிவாகவில்லை

Updated On :8 நவம்பர் 2022, 9:18 am

புது தில்லி: இந்தியாவில் கரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து பதிவாகி வருகிறது. இன்று காலை நிலவரப்படி 625 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை கரோனாவுக்கு ஒருவரும் பலியாகவில்லை. இது 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பிறகு முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு யாரும் பலியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 625 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,46,62,141 ஆக உள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 14,021 ஆக உள்ளது. 24 மணி நேரத்தில் பலி எதுவும் பதிவாகவில்லை. இதனால் மொத்த உயிரிழப்பு 5,30,509 ஆகவே உள்ளது.

இதுவரை 4,41,17,611 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். நாட்டில் இதுவரை 219.74 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.