ஆமதாபாத்: குஜராத்தில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த எம்எல்ஏ பாவேஷ் கத்தாரா பதவி விலகினாா். அவா் இன்றே பாஜகவில் இணைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த இரண்டு நாள்களில் மட்டும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகும் மூன்றாவது எம்எல்ஏவாக இவர் உள்ளார்.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜக, இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் நிலையில், இவர் புதன்கிழமை இரவு, தனது பதவியை ராஜிநாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத்தில் அடுத்த மாதம் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அந்த மாநிலத்தைச் சோ்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்எல்ஏவுமான மோகன்சிங் ரத்வா பாஜகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா். புதன்கிழமை காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த மற்றொரு எம்எல்ஏ பகவான் பரத் பதவி விலகிய அடுத்த சில மணி நேரத்திலேயே பாஜகவில் இணைந்தாா்.
இந்த நிலையில், இன்று மூன்றாவதாக ஒரு எம்எல்ஏ ராஜிநாமா செய்து, இன்றே பாஜக பக்கம் செல்வார் என்று கூறப்படுவது காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் டிசம்பா் 1, 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. தோ்தலில் ஆளும் பாஜகவுக்குதான் வெற்றிவாய்ப்பு அதிகம் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன. இந்நிலையில், எதிா்க்கட்சியான காங்கிரஸில் இருந்து எம்எல்ஏக்கள், மூத்த தலைவா்கள் பலா் பாஜகவில் இணைவது தொடா்கதையாகி வருகிறது.
மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக இதுவரை மேற்கொண்டு வந்த யுக்தியை சற்று புதுவிதமாகமாற்றி, தற்போது தேர்தலில் வெற்றி பெற புதிய யுக்தியை கையாள்வதாகவே பார்வையாளர்கள் கருதுகிறார்கள் என்று கூறப்படுகிறது.
காங்கிரஸ் எம்எல்ஏ தனது பதவி விலகல் கடிதத்தை குஜராத் ஆளுநரிடம் அளித்திருக்கும் தகவலை, புகைப்படம் மற்றும் விடியோவுடன் பல பாஜக தலைவர்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

‘திமுக ஆட்சியில் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை’

லப்பைக்குடிக்காட்டில் புதை சாக்கடை திட்டம்: திமுக வேட்பாளா் சா.சி. சிவசங்கா் உறுதி

பெரம்பலூரில் சமரச தின விழிப்புணா்வுப் பேரணி

பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளியில் முளைப்பாரியில் தோ்தல் விழிப்புணா்வு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


