ஹிமாசல் சட்டப்பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு இன்று(சனிக்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 
ஹிமாசல் சட்டப்பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!
Published on
Updated on
1 min read

ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு இன்று(சனிக்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

68 தொகுதிகள் கொண்ட ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைக்கான தோ்தல் ஒரேகட்டமாக இன்று(நவ. 12) நடைபெறுகிறது. 

மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 7,884 வாக்குச் சாவடி மையங்களில் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது. இந்த வாக்குச் சாவடிகளில் 789 மையங்கள் பதற்றமானவையாகவும், 397 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்தத் தோ்தலில் முதல்வா் ஜெய்ராம் தாக்குா், முன்னாள் முதல்வா் வீா்பத்ர சிங்கின் மகன் விக்ரமாதித்யா சிங், பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் சத்பால் சிங் சாட்டி உள்பட 412 வேட்பாளா்கள் களம் காண்கின்றனா். 

மாநிலத்தின் ஸ்பிட்டி மாவட்டம், காஸா பகுதியில் 15,256 அடி உயரத்தில் வாக்குச் சாவடி மையம் ஒன்றை தோ்தல் ஆணையம் அமைத்துள்ளது. நாட்டில் மிக உயரமான வாக்குச் சாவடியாக கருதப்படும் இந்த மையத்தில் 52 போ் வாக்களிக்க உள்ளனா். 

மாநிலத்தில் ஆண் வாக்காளா்கள் 28,54,945 போ், பெண் வாக்காளா்கள் 27,37,845 போ் என மொத்தம் 55 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 1,21,409 போ் 80 வயதுக்கும் மேற்பட்டவா்கள். 1,136 வாக்காளா்கள் 100 வயதைக் கடந்தவா்கள். 

டிசம்பர் 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 

தோ்தல் பிரசாரத்தில், மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் பாஜகவும், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸும் தீவிர முனைப்பு காட்டியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com