பலன்பூர்: குஜராத் மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்தான், மாநிலத்தின் அடுத்த 25 ஆண்டு காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தீர்மானிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பலன்பூரில் இன்று பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்திலும், மத்தியலும் பாஜக ஆட்சி நடைபெற்றக் காலத்தில், மாநிலத்துக்கு ஏராளமான மேம்பாட்டுத் திட்டங்கள் செய்துமுடிக்கப்பட்டுள்ளன. மாநிலம் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது என்றார்.
இதையும் படிக்க.. 500 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டன: நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்
குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 182 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.
இந்த நிலையில், குஜராத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி பேசுகையில், இந்த தேர்தல் வெறுமனே யார் எம்எல்ஏவாகப் போகிறார்கள், எந்தக் கட்சி மாநிலத்தை ஆளப்போகிறது என்பதை மட்டும் தீர்மானிக்கப்போவதில்லை.
இதையும் படிக்க.. மின் இணைப்பு - ஆதார் எண் இணைப்பில் அவசரம் ஏன்?
இந்த தேர்தல்தான், அடுத்த 25 ஆண்டுகளுக்கு குஜராத் மாநிலம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தீர்மானிக்கப் போகிறது. மாநிலம் மிகப்பெரிய பாய்ச்சலை சந்திக்கப் போகிறது தற்போது என்றும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

3வது நாளாக சரிந்த இந்திய பங்குச் சந்தை! சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு!

2 ஆம் கட்ட அமைதிப்பேச்சு! பாக். செல்கிறார் ஈரானின் வெளியுறவு அமைச்சர்!

இந்த ஆண்டின் மிக வெப்பமான நாள்! தில்லியில் 109.4 டிகிரி வெய்யில்!

ஜெயிலர் - 2 மெகா ஹிட் அடிக்கும்: யோகி பாபு
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


