2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

டிச. 4ல் காங்கிரஸ் வழிகாட்டுதல் குழுவின் முதல் கூட்டம்! கார்கே தலைமையில் நடைபெறுகிறது

காங்கிரஸ் வழிகாட்டுதல் குழுவின் முதல் கூட்டம் வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

News image
Updated On :24 நவம்பர் 2022, 6:28 am

DIN

காங்கிரஸ் வழிகாட்டுதல் குழுவின் முதல் கூட்டம் வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

கடந்த மாதம் நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்ற பிறகு காங்கிரஸ் காரிய கமிட்டி கலைக்கப்பட்டு 47 பேர் கொண்ட புதிய காங்கிரஸ் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டது. 

இதில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங், ஆனந்த் ஷர்மா, திக்விஜய் சிங், பிரியங்கா காந்தி, தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரம், மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இதன் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தக் குழுவில் சசி தரூர் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், காங்கிரஸ் வழிகாட்டுதல் குழுவின் முதல் கூட்டம் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், டிசம்பர் 7 ஆம் தேதி தொடங்கவுள்ளதையடுத்து கூட்டத்தொடரில் எடுத்துரைக்க வேண்டிய பிரச்னைகள், பின்பற்ற வேண்டிய வியூகம் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் காங்கிரஸ் மாநாடு நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.