தில்லியில் இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கில் கைதாகியுள்ள குற்றவாளிக்கு தில்லி காவல் துறை கடுமையான தண்டனை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: நான் இந்த வழக்கு முழுவதையும் கவனித்து வருகிறேன். இந்த கொலை வழக்கில் குற்றவாளி யாராக இருந்தாலும் அந்த குற்றவாளிக்கு குறுகிய காலத்தில் கடுமையான தண்டனையை சட்டத்தின் மூலம் பெற்றுத் தருவேன். தில்லி மற்றும் மும்பை காவல் துறைக்கு இடையே சிறந்த ஒத்துழைப்பு உள்ளது. ஆனால், மும்பை காவல் துறையில் ஷ்ரத்தா அளித்த புகாரில் தில்லி காவல் துறையால் ஒன்றும் செய்ய முடியாது.
இதையும் படிக்க: ஒற்றைப் பெயர் கொண்டவர்கள் இனி இந்த நாட்டுக்குப் போக முடியாதாம்
மகாராஷ்டிர காவல் நிலையத்தில் ஷ்ரத்தா, அஃப்தாப் தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாகவும், துண்டு துண்டாக வெட்டிவிடுவார் எனவும் புகார் அளித்துள்ளார். அப்போது அவரது புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த நேரத்தில் மகாராஷ்டிரத்தில் எங்களுடைய ஆட்சி இல்லை. இந்த கொலைக்கு காரணமான குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நைஜீரியாவில் தொடரும் அவலம்! ஒரே நாளில் பெண்கள், குழந்தைகள் உள்பட 300 பேர் கடத்தல்!

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!

ஹார்திக் பாண்டியா ஒரு கிளட்ச்..! இம்பாக்ட் வீரர் விருது விடியோ!

Whistle Podu Please! CSK அணியின் ரசிகர் பேருந்து அறிமுகம்!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

