சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

ம.பி.யில் காங். நடைப்பயணம்: தொடர்ந்து 2-ம் நாளாக பிரியங்கா காந்தி பங்கேற்பு!

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஒற்றுமை நடைப்பயணத்தில் அவரது சகோதரியும் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி வதேரா தொடர்ந்து 2-வது நாளாக இன்று பங்கேற்றார்.

News image
Updated On :25 நவம்பர் 2022, 5:47 am

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையிலான ஒற்றுமை நடைப்பயணத்தில் அவரது சகோதரியும் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி வதேரா தொடர்ந்து 2-வது நாளாக இன்று(வெள்ளிக்கிழமை) பங்கேற்றார். 

Story image

தமிழகத்தின் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பா் 7-ஆம் தேதி தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம், கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது மத்திய பிரதேசத்தில் புதன்கிழமை நுழைந்தது. 

Story image

மத்தியப் பிரதேசத்தில் 3-வது நாளான இன்று கார்கோன் மாவட்டம் கெர்தா பகுதியில் இருந்து ஒற்றுமை நடைப்பயணம் தொடங்கியது. இதில்  ராகுல் காந்தியுடன் தொடர்ந்து 2-வது நாளாக பிரியங்கா காந்தி பங்கேற்றுள்ளார். பிரியங்கா காந்தியின் மகன் ரிஹான் வதேராவும் பங்கேற்றுள்ளார். 

Story image

நேற்று பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. 

79-ஆவது நாளாக நீடித்து வரும் ராகுலின் நடைப்பயணம், மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜஸ்தானில் டிசம்பா் 4-இல் நுழையவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.