தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

115.80 மெட்ரிக் டன் சரக்குகளை ஏற்றிச் சென்று இந்திய ரயில்வே சாதனை!

இதுவரை இல்லாத அளவில் செப்டம்பர் மாதத்தில் 115.80 மெட்ரிக் டன் சரக்குகளை ஏற்றிச் சென்று இந்திய ரயில்வே சாதனை படைத்துள்ளது.

இந்தியன் ரயில்வே

Published On :


இதுவரை இல்லாத அளவில் செப்டம்பர் மாதத்தில் 115.80 மெட்ரிக் டன் சரக்குகளை ஏற்றிச் சென்று இந்திய ரயில்வே சாதனை படைத்துள்ளது.

இந்திய ரயில்வே மூலம் கொண்டு செல்லப்பட்ட சரக்குகளின் அளவு செப்டம்பர் மாதத்தில் இதுவரை இல்லாத வகையில் 115.80 மெட்ரிக் டன்னாக சாதனை படைத்துள்ளது. இது 2021 செப்டம்பர் மாதத்தை விட 9.15 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 25 மாதங்களாக, ரயில்கள் மூலம் ஏற்றிச் செல்லப்படும் சரக்குகளின் அளவு இதற்கு முன்பு இருந்ததை விட அதிகரித்து சாதனை புரிந்துள்ளது.

6.8 மெட்ரிக் டன் நிலக்கரி, அதைத்தொடர்ந்து 1.2 மெட்ரிக் டன் இரும்புத் தாது, 0.4 மெட்ரிக் டன் சிமென்ட் மற்றும் க்ளிங்கர், 0.3 மெட்ரிக் டன் உரங்கள் உள்ளிட்ட சரக்குகளை ஏற்றி ரயில்வே சாதனை படைத்துள்ளது. 

2022-23 நிதியாண்டில் ரயில் மூலம் கொண்டு செல்லப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததும் மற்றொரு சிறப்பம்சமாக உள்ளது. 

முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 1575 ரேக்குகள் கொண்டு செல்லப்பட்டதுடன் ஒப்பிடுகையில், நிதியாண்டு 2022-23 இல் 2,712 ரேக்குகள் கொண்டு செல்லப்பட்டு, 72.2 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்தன.

ஏப்ரல் 1, 2022 முதல் செப்டம்பர் 30, 2022 வரை ரயில்களில் கொண்டு செல்லப்பட்ட மொத்த சரக்குகளின் அளவு 736.68 மெட்ரிக் டன் ஆகும்.  இது  2021-22 இன் அளவான 668.86 மெட்ரிக் டன்னை விட 10.14 சதவீதம் அதிகமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.