உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜவாதி நிறுவனருமான முலாயம் சிங் யாதவிற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
தில்லி தேசிய தலைநகா் வலையப் பகுதியில் உள்ள குருகிராமில் செயல்பட்டு வரும் மேதாந்தா மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி முலாயம் சிங் யாதவ் அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு அவருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உடல்நிலை மோசமானதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டாா்.
இந்நிலையில், அவரின் உடல்நிலை தொடர்ந்து மோசமாக இருப்பதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முலாயம் சிங்கின் உடல்நிலை மோசமானதை அறிந்து, அவரின் மகனும் சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், உத்தர பிரதேசத்தில் இருந்து தில்லி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிப்பு! 5 இடங்களுக்கு விரைவில் இடைத்தேர்தல்?

குவாலிஃபையர் 1: ஆர்சிபிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

உசிலம்பட்டி: மின்னல் பாய்ந்து கூலித் தொழிலாளிகள் 3 பேர் பலி!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



