
இந்திய ஒற்றுமைக்கான நடைபயணத்தை மகாராஷ்டிர மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வரவேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீா் வரை ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம்(பாரத் ஜோடோ யாத்ரா), தமிழகம், கேரளாவை தொடர்ந்து தற்போது கா்நாடகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான தொண்டா்கள் பங்கேற்று வருகிறாா்கள்.
இந்த நடைபயணமானது, நவம்பர் 9ஆம் தேதி மகாராஷ்டிரத்தை அடையும் போது, ராகுல் காந்தி உள்ளிட்ட நடைபயண குழுவினரை சரத் பவார் வரவேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க | முலாயம் சிங் யாதவ் கடந்து வந்த பாதை..!
மேலும், இந்த நிகழ்வில் மகா விகாஸ் அகாடி கூட்டணியை சேர்ந்த பிற கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
மொத்தம் 150 நாள்கள் 3600 கி.மீ. ஒற்றுமைக்கான நடைபயணம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.