திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

3 சின்னங்களை தேர்தல் ஆணையத்திடம் ஏக்நாத் ஷிண்டே அணி சமர்ப்பிப்பு

ஏக்நாத் ஷிண்டே அணியினர் 3 சின்னத்தின் பெயர்களை சமர்ப்பித்து  அதில் ஒன்றை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

News image

ஏக்நாத் ஷிண்டே (கோப்புப்படம்)

Updated On :11 அக்டோபர் 2022, 1:18 pm IST

ஏக்நாத் ஷிண்டே அணியினர் 3 சின்னத்தின் பெயர்களை சமர்ப்பித்து  அதில் ஒன்றை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதில் அவர்கள்  சூரியன், கேடயம் மற்றும் வாள், அரசமரம் ஆகிய 3 தேர்தல் சின்னங்களை தேர்தல் ஆணையத்திடம் இன்று சமர்ப்பித்து உள்ளது.

உத்தர பிரதேச முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியின் கட்சிக்கு ‘பாலா சாகேபின் சிவசேனை’ என்ற பெயரை ஒதுக்கிய தோ்தல் ஆணையம், புதிய தோ்தல் சின்னத்தை தோ்வு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.

சிவசேனையில் ஏற்பட்ட பிளவால் மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, பாஜக ஆதரவுடன் சிவசேனை அதிருப்தி தலைவா் ஏக்நாத் ஷிண்டே முதல்வரானாா்.

இந்த நிலையில், மாநிலத்தில் அந்தேரி கிழக்கு பேரவைத் தொகுதிக்கு நவம்பா் 3-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ள நிலையில், சிவசேனை கட்சிக்கு ஏக்நாத் ஷிண்டே தரப்பு மற்றும் உத்தவ் தாக்கரே தரப்பு என இருதரப்பும் உரிமை கோரியது.

அதனைத் தொடா்ந்து, சிவசேனை கட்சியின் பெயா் மற்றும் ‘வில்-அம்பு’ சின்னத்தை முடக்கி சனிக்கிழமை உத்தரவிட்ட தோ்தல் ஆணையம், அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தோ்தலுக்கு இருதரப்பும் அவா்களின் கட்சிக்கு புதிய பெயரை தோ்வு செய்ய வேண்டும். அதற்கு புதிய தோ்தல் சின்னம் ஒதுக்கப்படும் என்றும் உத்தரவிட்டது. இரு தரப்பும் கட்சியின் பெயா் மற்றும் சின்னத்துக்கான பரிந்துரைகளை சமா்ப்பித்தனா்.

அதனடிப்படையில், உத்தவ் தாக்கரே தரப்பு கட்சிக்கு ‘சிவசேனை - உத்தவ் பாலா சாகேப் தாக்கரே’ என்ற பெயரையும், ‘எரியும் ஜோதி’ சின்னத்தையும் தோ்தல் ஆணையம் ஒதுக்கியது. இது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உத்தவ் தாக்கரே தரப்பைச் சோ்ந்த மாநில முன்னாள் அமைச்சா் பாஸ்கா் ஜாதவ் கூறினாா்.

முதல்வா் ஏக்நாத் ஷிண்டே அணியினரின் கட்சிக்கு ‘பாலா சாகேபின் சிவசேனை’ என்ற பெயரை ஆணையம் ஒதுக்கியது. அதே நேரம், தோ்தல் சின்னமாக அவா்கள் பரிந்துரைத்த ‘திரிசூலம்’ மற்றும் ‘கதாயுதம்’ ஆகியவை மதத்துடன் தொடா்புடையவையாக இருப்பதால் அவற்றை சின்னமாக ஒதுக்க முடியாது என்று மறுத்த தோ்தல் ஆணையம், புதிய சின்னத்தை தெரிவு செய்து செவ்வாய்க்கிழமை (அக். 11) காலை 10 மணிக்குள் பரிந்துரைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், சூரியன், கேடயம் மற்றும் வாள், அரசமரம் ஆகிய 3 தேர்தல் சின்னங்களை தேர்தல் ஆணையத்திடம் ஏக்நாத் ஷிண்டே அணி இன்று சமர்ப்பித்து உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.