பெண் குழந்தைகளுக்கான சம உரிமையை உறுதி செய்வோம்: கேரள முதல்வர்

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பெண் குழந்தைகளுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பெண் குழந்தைகளுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

1995ஆம் ஆண்டில், பல்வேறு பிரச்னைகளால் பெண் குழந்தைகள் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டு, பெய்ஜிங்கில் நடந்த பெண்களுக்கான உலக மாநாட்டில், பெண் குழந்தைகளுக்காகவும், பெண்களுக்காகவும் ஒரு சிறப்பு நிகழ்வு நடத்தப்பட்டது. 

இந்த நிகழ்வில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11ஆம் தேதி பெண் குழந்தைகள் தினமாக அறிவிப்பதற்கான தீர்மானம் ஐ.நா.சபையால்  2011 டிசம்பரில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்பிறகு, கடந்த 2012 முதல் அக்டோபர் 11ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள சுட்டுரை பதிவில், 

அனைத்து பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கும் வாழ்த்துக்கள். 

பெண்கள் சம உரிமைகளையும், தரமான கல்வியைப் பெறவும், சத்தான உணவுகளை உட்கொள்ளவும், தரமான சுகாதாரத்தை அணுகவும், சுயமாக சம்பாதிக்கவும், சுதந்திரமாக இருக்கவும், தலைநிமிர்ந்து பயமின்றி வாழவும் முடியும் என்பதை இந்த நாளில் உறுதி செய்வோம் என்று அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com