புயல் எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை: எச்சரிக்கிறது வானிலை மையம்

ஒடிசா மாநில கரையோர மாவட்டங்களுக்கு எந்த விதமான புயல் எச்சரிக்கையும் விடப்படவில்லை. மக்கள் அனைவரும் புயல் தொடர்பான புரளிகளிலிருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு புவனேஸ்வரம் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்
புயல் எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை: எச்சரிக்கிறது வானிலை மையம்
புயல் எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை: எச்சரிக்கிறது வானிலை மையம்
Updated on
1 min read

புவனேஸ்வரம்: ஒடிசா மாநில கரையோர மாவட்டங்களுக்கு எந்த விதமான புயல் எச்சரிக்கையும் விடப்படவில்லை. மக்கள் அனைவரும் புயல் தொடர்பான புரளிகளிலிருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு புவனேஸ்வரம் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அது தொடர்பான செய்தியில், இதுவரை புயல் எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. அது மட்டுமல்ல, புயல் தொடர்பான எந்த ஒரு சிறிய தகவல் கூட வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.

புயல் மற்றும் மழை தொடர்பாக பரவும் புரளிகளிடமிருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல, அறிவியல்பூர்வமாக ஏழு நாள்களுக்கு முன்பே, வானிலையை கண்காணிக்க முடியாது என்றும், வானிலை தொடர்பாக மக்களுக்கு துல்லியமான தகவல்களை அளிக்க நாங்கள் 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கிறோம். எனவே, மக்களே, புரளிகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com