நொய்டா குடியிருப்புகளில் விரைவில் தண்ணீர் அளவீட்டுக் கருவி பொருத்தம்
நொய்டாவில் உள்ள அனைத்து குடியிருப்புகளிலும் தண்ணீர் பயன்பாடு அளவீடு செய்வதற்கான கருவி பொருத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


நொய்டாவில் உள்ள அனைத்து குடியிருப்புகளிலும் தண்ணீர் பயன்பாடு அளவீடு செய்வதற்கான கருவி பொருத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் தண்ணீர் பயன்பாட்டை முறைப்படுத்துவதாகக் கூறி பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
இதையும் படிக்க | தமிழகத்தில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம்
இந்நிலையில் நொய்டாவில் உள்ள அனைத்து குடியிருப்புகளிலும் தண்ணீர் மீட்டர் கருவி பொருத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீணாகும் தண்ணீரை கணக்கிடவும், அதீத தண்ணீர் பயன்பாட்டை தடுக்கவும் இந்த அளவீட்டு கருவி பொருத்தப்படுவதாகத் தெரிவித்த அதிகாரிகள் விரைவில் இந்தப் பணி நிறைவடையும் என உறுதி தெரிவித்துள்ளனர்.
குறைவான தண்ணீரை பயன்படுத்துபவர்கள் குறைவாகவும், அதிகமாக தண்ணீரை உபயோகிப்பவர்கள் அதற்கேற்றாற் போல கட்டணம் செலுத்தும் சூழலும் உருவாகும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிக்க | ’காந்தாரா’ தமிழ் டிரைலர் வெளியீடு
ஏற்கெனவே 400 குடியிருப்புகளில் இந்த அளவீட்டுக் கருவி பொருத்தப்பட்ட நிலையில் இந்த மாத இறுதிக்குள் மேலும் 370 குடியிருப்புகளில் தண்ணீர் அளவீட்டுக் கருவி பொருத்தப்படும் என இந்தத் திட்டத்தின் சிறப்பு அலுவலர் அவினாஷ் திரிபாதி தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த முறைக்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தண்ணீரை வணிக உற்பத்திக்காக பயன்படுத்தும் பெரும் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய அரசு சாதாரண மக்களுக்கு கிடைக்கும் பற்றாக்குறையான தண்ணீருக்கும் விதிக்கும் கட்டுப்பாடு ஆபத்தானது என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...