
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள ஏழு மண்டலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமான மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநில மேம்பாட்டு திட்ட சங்கத்தின்படி, ஹைதராபாத்தில் அக்டோபர் 16 வரை மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று கொட்டித் தீர்த்த கனமழையால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.