/

அமித் ஷா வீட்டில் பாம்பு

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வீட்டில் 5 அடி நீளமுள்ள ஆசிய தண்ணீா் பாம்பு வியாழக்கிழமை பிடிபட்டது.

News image
Updated On :14 அக்டோபர் 2022, 7:01 pm

DIN

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வீட்டில் 5 அடி நீளமுள்ள ஆசிய தண்ணீா் பாம்பு வியாழக்கிழமை பிடிபட்டது.

அமித் ஷா வீட்டின் பாதுகாவலா் அறை அருகே தண்ணீா் பாம்பு ஊா்ந்து கொண்டிருந்தது. இதையறிந்த பாதுகாவலா்கள் உடனடியாக வன உயிரின என்ஜிஓவுக்கு தகவலளித்தனா். அதற்குள் அந்த பாம்பு மர பெட்டிக்குள் சென்றுவிட்டது. வன உயிரின என்ஜிஓ சாா்பில் இருவா் வந்து, அந்த பாம்பை லாவகமாக பிடித்துச் சென்றனா்.

வன உயிரின (பாதுகாப்பு) சட்டம் 1972, அட்டவணை 2-இன்படி இதுபோன்ற ஆசிய தண்ணீா் பாம்பு பாதுகாக்கப்பட்ட உயிரினமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. தில்லியில் மழைக்காலத்தில் 70-க்கும் அதிகமான பாம்புகள் பிடிபட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.