/

ஆஸ்திரேலியாவில் இனவெறி தாக்குதல்: இந்திய மாணவருக்கு நேர்ந்த துயரம்

சிட்னியில் அமைந்துள்ள நியூ சௌத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய பிஎச்டி மாணவர் சுபம் கார்க்(28) மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

News image

ஆஸ்திரேலியாவில் இனவெறி தாக்குதல்: இந்திய மாணவருக்கு நேர்ந்த துயரம்

Updated On :14 அக்டோபர் 2022, 7:13 am

DIN

ஆஸ்திரேலியாவில், சிட்னியில் அமைந்துள்ள நியூ சௌத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய பிஎச்டி மாணவர் சுபம் கார்க்(28) மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அக்டோபர் 6ஆம் தேதி அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், 11 முறை கத்தியால் குத்தியதில் கவலைக்கிடமான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

ஆக்ராவைச் சேர்ந்த சுபம் கார்க்கின் பெற்றோர், கடந்த 7 நாள்களாக, ஆஸ்திரேலியா செல்ல விசா பெற முயன்றும் இதுவரை எந்த பலனும் இல்லை.

சுபம் கார்க், சென்னை ஐஐடியில் முதுகலை பட்டம் பெற்று, கடந்த செப்டம்பர் 1ஆம் தேதிதான் ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.

சுபம் குறித்து அவரது பெற்றோர் கூறுகையில், முகம், நெஞ்சுப் பகுதி மற்றும் வயிறு என 11 இடங்களில் மிகமோசமான கத்திக் குத்துக் காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும், இதில் தொடர்புடைய 27 வயது நபர் கைது செய்யப்பட்டு, கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.