குஜராத்தில் ஒவ்வொரு 4 கி.மீ.க்கும் ஒரு பள்ளி: ஆம் ஆத்மி அறிவிப்பு

குஜராத்தில் ஆட்சியமைத்தால் முக்கியமான 8 நகரங்களில் ஒவ்வொரு 4 கி.மீ.க்கும் ஒரு பள்ளியை ஆம் ஆத்மி அரசு கட்டும் என தில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறியுள்ளார்.
குஜராத்தில் ஒவ்வொரு 4 கி.மீ.க்கும் ஒரு பள்ளி: ஆம் ஆத்மி அறிவிப்பு

குஜராத்தில் ஆட்சியமைத்தால் முக்கியமான 8 நகரங்களில் ஒவ்வொரு 4 கி.மீ.க்கும் ஒரு பள்ளியை ஆம் ஆத்மி அரசு கட்டும் என தில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறியுள்ளார்.

குஜராத் மாநிலத்தின் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் 182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதியுடனும் நிறைவடைகிறது.

ஹிமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலமும் முடிவடைகிறது. அங்கு இந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

மாநிலத்தில் ஆளும் பாஜகவுக்கும், எதிா்க்கட்சியான காங்கிரஸும் இதுவரை வேட்பாளா்கள் யாரையும் அறிவிக்காத நிலையில், அங்கு ஆம் ஆத்மி முழுவீச்சில் தோ்தல்களத்தில் இறங்கியுள்ளது.

இந்நிலையில், இன்று அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரும் தில்லி துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா குஜராத் மக்கள் எங்களை வெற்றிபெறச் செய்தால் அகமதாபாத், சூரத், வதோதரா, ஜாம்நகர், ராஜ்கோட், பாவ்நகர், காந்திநகர் மற்றும் ஜூனாகத் ஆகிய நகரங்களில் ஒவ்வொரு 4 கி.மீ.க்கும் ஒரு பள்ளியை கட்டுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com